Wednesday 22 June 2022

HAPPINESS - சந்தோசம் - மகிழ்ச்சி

 
வாழ்க்கைல எல்லாமே சந்தோசமா அமையாது. ஆனா நாம எல்லாத்தையும் சந்தோசமா எடுத்துக்கலாம். உலகமே ஒரு நாடக மேடைன்னு சொல்வாங்க. நடிக்க மட்டும் இல்ல, நடிக்கர மாதிரி நடிக்கவும் தெரியணும். அப்போ தான் இந்த உலகத்தில உலவ முடியும்.

பலவகையான மகிழ்ச்சி தருணங்கள் இருக்கு. ஆனா பிள்ளை பருவமும், பள்ளி பருவமும் எதுக்குமே ஈடாகாது. ஏன்னா அப்போ நாம இந்த சமூகத்தை பத்தியோ உலகத்தை பத்தியோ யோசிக்கவோ, புரிஞ்சுக்கணும் னு முற்படுறது இல்ல.  ஒரு வேலை அந்த பள்ளி படிப்பும் பதின்மவயதுக்குள்ள முடிஞ்சா கூட உலகமே நம்ம கூட தான் னு நெனைக்க தோணும்..

அந்த சின்ன உலகத்தில நமக்கான உலகம் சின்னதாவே போய்டும், இனிப்பு சாப்பிட்டா சந்தோசம், தெருவுல விளையாடும்போது சந்தோசம், அம்மாவோ அப்பாவோ நம்மகூட நேரம் ஒதுக்கும்போது ரொம்பவே சந்தோசம்.. இப்படி நெறய சொல்லிட்டே போகலாம்.

பால்ய பருவத்திலே நாமாவே கத்துக்கற சைக்கிள், பள்ளி விளையாட்டுகள்ல பங்கெடுத்து பரிசு வாங்கறது, ஆசிரியர்கள் நமக்குன்னு பரிசுகள் கொடுக்கறது னு நிறையவே சந்தோஷத்துக்கு அளவுகளே இல்ல இந்த பருவத்திலே.

மழைல நனைறது வேறுவிதமான சந்தோசம், ஏன்னா கடவுளே நேரடியா சந்தோசத்தை மழையா நம்ம மேல பொழிவார்னு நான் கேள்வி பட்டிருக்கேன். ஆனாலும், அதெல்லாம் யோசிக்காம கடவுளோட கைகோர்த்து விளையாட மழையும் ஒரு விளையாட்டா மாறிடும். அவரோட விளையாட யாருக்கு தான் பிடிக்காது.

அம்மாவோட கட்டு சாப்பாட்டில் இருக்கற ருசி, நமக்கான அளவற்ற சந்தோசத்தின் கோயில் னே சொல்லலாம். எங்க போனாலும் அவளோட ஞாபகம், அவளோட ருசிய தேடறதுனு வாழ்க்கைல நமக்கான அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் மகிழ்ச்சி. அவளுக்கு நிகர் அவளே தான்.

என்னென்ன மகிழ்ச்சியோ  அனைத்திற்கும் அடித்தளம் அவளே.. ஊனே, உயிரே, உணர்வே னு அவளை பத்தி நினைச்சாலே சந்தோஷமும் நம்ம கூடவே பெருக்கெடுக்கும். அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியின் புதையல்..

குழைந்தையின் மனமும், அம்மாவின் மடியும் கிடைக்க பெற்றவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.. ஊற்றெடுக்கும் சந்தோசத்தின் வழிகாட்டிகள்..  

 

Thursday 27 February 2020

மீண்டும் தனிமையில்



உன்னோடுதான் என் நிழல்...
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
உன்னுடைய பிரிவை..
பிரிவு என்பதே உறவுக்காகத்தான் ..

உறவை புதுப்பித்து
உயிரை புதுப்பிக்க துடிக்கும்
என் இதய துடிப்புக்கு
நீயே உயிர் நாடி...

 

Monday 30 December 2019

Last day of 2019

புதுமைக்கு வித்திடும் கடைசி நாள்:

போனவை போனவையாய் இருக்கட்டும்,
மனிதர்களும் சரி, பொருட்களும் சரி..

நாம என்னதான் புடிச்சு வெச்சாலும் நம்மகூட பயணிக்கவேண்டியது  நம்ம கூடவே இருக்கும். ஆனா நம்மதான், நம்மள மதிக்காத நமக்கு மதிப்பில்லாத விஷயங்களுக்கும் பொருட்களுக்கும் மதிப்பு கொடுத்து நம்முடைய பொன்னான நேரத்த வீணடிக்கறோம்.

இந்த நாள் 2019 வருஷத்துக்கு கடைசி நாளா இருக்கலாம். ஆனா 2019 கொடுத்த பரிசுகள், இன்பங்கள், உறவுகள் எல்லாமே நம்ம கூட பயணிக்கும்... 2019 கொடுத்த கஷ்டங்கள், துன்பங்கள், வேதனைகள் எல்லாமே இந்த நாளோட விட்டுடலாம்.

2019 கொடுத்த சோதனைகள், பாடங்களும் நம்ம கூட கொண்டு போவோம் நல்ல புது வருடமும் பொற்காலமும் இந்த படிப்பினை மூலம் உருவாக்கிக்குவோம்.

நான் யாருக்கும் ஆசான் இல்ல... என்னை உங்க கூட சக பயணியா நெனச்சீங்கன்னா  நான் சொல்றது புரியும்.

நமக்கான வாழ்க்கையை நாம தான் வாழணும். எல்லாரும் எல்லா காலமும் நம்மகூட வரமாட்டாங்க.. உன் சுயம் தான் உண்மை... உனக்கே உனக்கு மதிப்பளிக்க பழகிக்கோங்க.. அதன் மூலம் மற்றவர்களும் உனக்கான இடத்தை கொடுக்கறது உன்னால உணர முடியும்.

சிந்தனைகள் பலதா இருக்கலாம் மனதால் என் உலகம், என் சமூகம், என் வாழ்க்கை அதோடு என் சுற்றமும் நட்பும் னு நினைச்சாலே நிறைய விஷயங்களுக்கு தீர்வு காணலாம்.

அன்பு, உழைப்பு, உறுதி, நம்பிக்கை, பொறுமை என எல்லாமும் இருக்கணும் .

வாழ்வு இனிக்க, புது வருடம் சிறக்க, 2019 வழியனுப்பி 2020 புத்துயிர் பெற வரவேற்போம்..

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

Tuesday 26 November 2019

Constitution Day of India - November 26th

The Government of India declared 26 November as Constitution Day on 19 November 2015 by a gazette notification. The Prime Minister of India Narendra Modi made the declaration on 11 October 2015 while laying the foundation stone of the B. R. Ambedkar's Statue of Equality memorial in Mumbai. The year of 2015 was the 125th birth anniversary of Ambedkar, who had chaired the drafting committee of the Constituent Assembly and played a pivotal role in the drafting of the constitution. Previously this day was celebrated as Law Day.

சட்டம் இயற்றி சென்றவன் மட்டுமே அறிவான் எதற்கான நாள் இதுவென்று...

Wednesday 30 October 2019

கான மழை
மேக மழை
பாச மழை
இவை அனைத்திலும் நீயாக
உன்னை  கண்டே உன்னின் நிழலிலும் நானாய்
சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாய்
என் தோல் தீண்டும் உன் சிறகுகள்....


Thursday 17 October 2019

தனிமை 

உல்லாச ஊஞ்சலில்
ஆடிப்பாடிடும்
பறவைக்கு தெரியாது
கூண்டில் இருக்கும்
கிளியின் தனிமை...

கிலியில் கிளி...

தனிமையும் அப்படியே...

Thursday 26 September 2019

பயணங்கள்

ரெக்கை இன்றி பறக்கிறேன்...
உன்னுடனான எனது பயணங்கள்...