வாழ்க்கைல எல்லாமே சந்தோசமா அமையாது. ஆனா நாம எல்லாத்தையும் சந்தோசமா எடுத்துக்கலாம். உலகமே ஒரு நாடக மேடைன்னு சொல்வாங்க. நடிக்க மட்டும் இல்ல, நடிக்கர மாதிரி நடிக்கவும் தெரியணும். அப்போ தான் இந்த உலகத்தில உலவ முடியும்.
பலவகையான மகிழ்ச்சி தருணங்கள் இருக்கு. ஆனா பிள்ளை பருவமும், பள்ளி பருவமும் எதுக்குமே ஈடாகாது. ஏன்னா அப்போ நாம இந்த சமூகத்தை பத்தியோ உலகத்தை பத்தியோ யோசிக்கவோ, புரிஞ்சுக்கணும் னு முற்படுறது இல்ல. ஒரு வேலை அந்த பள்ளி படிப்பும் பதின்மவயதுக்குள்ள முடிஞ்சா கூட உலகமே நம்ம கூட தான் னு நெனைக்க தோணும்..
அந்த சின்ன உலகத்தில நமக்கான உலகம் சின்னதாவே போய்டும், இனிப்பு சாப்பிட்டா சந்தோசம், தெருவுல விளையாடும்போது சந்தோசம், அம்மாவோ அப்பாவோ நம்மகூட நேரம் ஒதுக்கும்போது ரொம்பவே சந்தோசம்.. இப்படி நெறய சொல்லிட்டே போகலாம்.
பால்ய பருவத்திலே நாமாவே கத்துக்கற சைக்கிள், பள்ளி விளையாட்டுகள்ல பங்கெடுத்து பரிசு வாங்கறது, ஆசிரியர்கள் நமக்குன்னு பரிசுகள் கொடுக்கறது னு நிறையவே சந்தோஷத்துக்கு அளவுகளே இல்ல இந்த பருவத்திலே.
மழைல நனைறது வேறுவிதமான சந்தோசம், ஏன்னா கடவுளே நேரடியா சந்தோசத்தை மழையா நம்ம மேல பொழிவார்னு நான் கேள்வி பட்டிருக்கேன். ஆனாலும், அதெல்லாம் யோசிக்காம கடவுளோட கைகோர்த்து விளையாட மழையும் ஒரு விளையாட்டா மாறிடும். அவரோட விளையாட யாருக்கு தான் பிடிக்காது.
அம்மாவோட கட்டு சாப்பாட்டில் இருக்கற ருசி, நமக்கான அளவற்ற சந்தோசத்தின் கோயில் னே சொல்லலாம். எங்க போனாலும் அவளோட ஞாபகம், அவளோட ருசிய தேடறதுனு வாழ்க்கைல நமக்கான அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் மகிழ்ச்சி. அவளுக்கு நிகர் அவளே தான்.
என்னென்ன மகிழ்ச்சியோ அனைத்திற்கும் அடித்தளம் அவளே.. ஊனே, உயிரே, உணர்வே னு அவளை பத்தி நினைச்சாலே சந்தோஷமும் நம்ம கூடவே பெருக்கெடுக்கும். அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியின் புதையல்..
குழைந்தையின் மனமும், அம்மாவின் மடியும் கிடைக்க பெற்றவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.. ஊற்றெடுக்கும் சந்தோசத்தின் வழிகாட்டிகள்..
Wednesday, 22 June 2022
HAPPINESS - சந்தோசம் - மகிழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
-
In July 2001, four staffers from a non-governmental organization in Lucknow working to fight HIV/AIDS among men who have sex with men (...
-
நான் ரசித்த கவிதை! கூடல்தான் காதலெனும் போது அதில் ஊடல் வருவது இயல்பல்லவா..? ஊடலை ஊதிப் பெரிதாக்கி எனை உதறித் தள்ளுவதேனடி..? நீ அருகில...
-
World Vision
No comments:
Post a Comment