புதுமைக்கு வித்திடும் கடைசி நாள்:
போனவை போனவையாய் இருக்கட்டும்,
மனிதர்களும் சரி, பொருட்களும் சரி..
நாம என்னதான் புடிச்சு வெச்சாலும் நம்மகூட பயணிக்கவேண்டியது நம்ம கூடவே இருக்கும். ஆனா நம்மதான், நம்மள மதிக்காத நமக்கு மதிப்பில்லாத விஷயங்களுக்கும் பொருட்களுக்கும் மதிப்பு கொடுத்து நம்முடைய பொன்னான நேரத்த வீணடிக்கறோம்.
இந்த நாள் 2019 வருஷத்துக்கு கடைசி நாளா இருக்கலாம். ஆனா 2019 கொடுத்த பரிசுகள், இன்பங்கள், உறவுகள் எல்லாமே நம்ம கூட பயணிக்கும்... 2019 கொடுத்த கஷ்டங்கள், துன்பங்கள், வேதனைகள் எல்லாமே இந்த நாளோட விட்டுடலாம்.
2019 கொடுத்த சோதனைகள், பாடங்களும் நம்ம கூட கொண்டு போவோம் நல்ல புது வருடமும் பொற்காலமும் இந்த படிப்பினை மூலம் உருவாக்கிக்குவோம்.
நான் யாருக்கும் ஆசான் இல்ல... என்னை உங்க கூட சக பயணியா நெனச்சீங்கன்னா நான் சொல்றது புரியும்.
நமக்கான வாழ்க்கையை நாம தான் வாழணும். எல்லாரும் எல்லா காலமும் நம்மகூட வரமாட்டாங்க.. உன் சுயம் தான் உண்மை... உனக்கே உனக்கு மதிப்பளிக்க பழகிக்கோங்க.. அதன் மூலம் மற்றவர்களும் உனக்கான இடத்தை கொடுக்கறது உன்னால உணர முடியும்.
சிந்தனைகள் பலதா இருக்கலாம் மனதால் என் உலகம், என் சமூகம், என் வாழ்க்கை அதோடு என் சுற்றமும் நட்பும் னு நினைச்சாலே நிறைய விஷயங்களுக்கு தீர்வு காணலாம்.
அன்பு, உழைப்பு, உறுதி, நம்பிக்கை, பொறுமை என எல்லாமும் இருக்கணும் .
வாழ்வு இனிக்க, புது வருடம் சிறக்க, 2019 வழியனுப்பி 2020 புத்துயிர் பெற வரவேற்போம்..
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

ReplyDeleteArumaiii😇